search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது இர்பான்"

    • உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது.
    • டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்.

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே கூறிவிட்டது. ஆனால் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியின் இடம்தான் கேள்விக்குறியாக உள்ளது.

    வெஸ்ட் இண்டீசில் உள்ள மெதுவான ஆடுகளங்கள் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்றதாக இருக்காது என்று தேர்வுக்குழு கருதுகிறது. எனவே அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி இல்லையென்றால் சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக் கோப்பையில் இந்தியா 3, 4 தோல்விகளை சந்தித்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதைப் பற்றி எனக்கு 2-வது யோசனை கிடையாது. உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது. ஏனெனில் அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக 3 - 4 போட்டிகளை தனது வழியில் வென்றுக் கொடுத்தார். ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்த இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

    எனவே அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது. டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு முகமது இர்பான் கூறினார். 

    ×